Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிரான்ஸில் தீவிரமடையும் கடன் நெருக்கடி

பிரான்ஸில் தீவிரமடையும் கடன் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஜெர்மனி அரசுப் பத்திரங்களுக்கு இடையிலான வட்டி விகித வித்தியாசம் 150 அடிப்படை புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பிரான்ஸ் நாட்டின் பொதுக்கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதமாக அதிகரித்துள்ளதால், அந்நாடு கடுமையான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் உலகளாவிய நிதிச் சந்தைகளில் எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே நிதி மேலாண்மையில் நிலவும் சிக்கல்களும், 2024 தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் ஸ்திரமின்மையும் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகும். புதிய வரிக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையால், பெருநிறுவனங்கள் தங்களது மூலதன முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளன. நாடாளுமன்றத்தில் நிலவும் இழுபறியால் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான பட்ஜெட்டை நிறைவேற்றுவதிலும் அரசு தொடர்ந்து தடுமாறி வருகிறது.

இந்த நெருக்கடியின் நேரடித் தாக்கம் சர்வதேசப் பத்திரச் சந்தைகளில் கடுமையாக எதிரொலிக்கிறது. முதலீட்டாளர்கள் பிரான்ஸ் அரசுப் பத்திரங்களை அதிகளவில் விற்று வருவதால், அரசுக்கான கடன் வாங்கும் செலவுகள் அபரிமிதமாக அதிகரித்துள்ளன. 

பிரான்ஸ் மற்றும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஜெர்மனி அரசுப் பத்திரங்களுக்கு இடையிலான வட்டி விகித வித்தியாசம் 150 அடிப்படை புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது 2011-ம் ஆண்டுக்குப் பிறகான உச்சமாகும். மேலும், அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த பொருளாதார மந்தநிலை கவலையளித்தாலும், ஐரோப்பிய கூட்டமைப்பு முழுமையான வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்பில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியின் வலுவான நிதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள், இந்த நெருக்கடியை அண்டை நாடுகளுக்குப் பரவாமல் தடுக்க உதவும். 

மேலும், ஜெர்மனி உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளின் தொழில் உற்பத்தித் துறை மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளதால், பிரான்ஸின் மந்தநிலையால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தை அவை ஈடுசெய்யும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

முந்தைய செய்தி
மின்னணு வடிவில் தங்க வர்த்தகம்: BSE உடன் MMTC-PAMP ஒப்பந்தம்
அடுத்த செய்தி
மின்சார வாகன முதலீட்டை தற்காலிகமாக நிறுத்திய வோக்ஸ்வாகன்

தொடர்புடைய செய்திகள்